7 – அர்ஜுன நந்தன்
7 – அர்ஜுன நந்தன் சாப்பிட்டு முடித்ததும் டிஐஜியிடம் அந்தப் போஸ்ட்மார்டம் ரிப்போர்டைக் கேட்டான் செந்தில். அவரது அலுவலக அறையிலேயே நகல் எடுத்துக் கொண்டு அவரிடம் உரையாட ஆரம்பித்தான். "அங்கிள் , இவன் சாப்பிட்ட பொருள்ல தான் விஷம் கலந்து இருக்கறதா போட்டு இருக்கு. அதுவும் இவன் அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னயே குடுக்கப்பட்ட ஸ்லோபாய்சன். இந்த மருந்து எங்க கிடைக்கும்னு விசாரிக்கனும். இன்னும் கொஞ்சம் இவன பத்தி தெரியனும் அங்கிள். அங்க பாதுகாப்பு எதாவது போட்டு இருக்கீங்களா? அங்க இவனுங்க இருந்த டென்ட் மத்த திங்ஸ் எல்லாம் பாக்கனும். அந்த 14 பேரும் எங்க...