32 – அகரநதி
32 - அகரநதி வீட்டில் கால் வைக்கும் சமயம் ஸ்டெல்லா யாரையோ கெட்அவுட் என கத்தியது தான் அனைவரின் செவிகளிலும் விழுந்தது. யாரிடம் அவள் இப்படிக் கத்திக்கொண்டு இருக்கிறாள் என்கிற யோசனையுடன் முதலில் சரண் தான் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து அகரனும் சிதம்பரமும் உள்ளே வந்தனர். நதியாளும் சஞ்சயும் பரமசிவத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி மெல்ல உள்ளே வந்தனர். அங்கே சரிதா வினயின் பின்னே நின்றபடி ஸ்டெல்லாவை முறைத்துக்கொண்டு இருந்தாள். சக்ரதேவும் மீராவும் சங்கடமாக நெளிந்தபடி நின்றிருக்க, ...