31 – காற்றின் நுண்ணுறவு
31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக் கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அங்கு வந்தவர்களுக்குப் பெரும் பொக்கிஷமே கிடைத்தது போல் இருந்தது. அந்த இடத்தை சுற்றி வந்துக் ...