Tag: poem

கருவிழி

கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி

கலந்துணர்வோம்

கலந்துணர்வோம் கரையுடைத்து உனையணைத்து ....உனக்குள் பயணித்து.....நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்....கண்டுணர்ந்தபடி....நம்மிடையே உருவாகும்...கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு....உனக்குள் நானும்....எனக்குள் நீயுமாக....கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா.......- ஆலோன் மகரி 

பிணம்….

மரத்து விட்டது மரணமும்…..இனி குத்த இடமில்லை தான்…ஆனாலும் கூர்முனை கத்திகள் குத்திக் கிழிக்கிறது மனதை…..தாயோ தந்தையோ உடன்பிறந்தோரோ….இம்மாய பூமியில் அனைவரும் ஒன்று தான்….வலி மட்டும் முக்கிய பொதுச் சொத்து….வேண்டாத போதும் மலையென குவிந்து வந்துவிடும்….சுமக்க முடியாமல் சுமந்து…மூச்சு நிற்கும் கணத்தில் சிறிது ஆசுவாசத்தோடு…..எலிக்கு வைக்கும் தேங்காய் துண்டு போல….மகிழ்ச்சியும் வந்துபோகும்….பித்துப் பிடித்த மனம்….அதன் பின்னால் செல்லும்போதே….பெரிதாக நம் பின்னால் வாளேந்தி நிற்கும்….ஒவ்வொரு முறையும் இதே இனிப்புத் துண்டு‌….அதே கத்திகுத்து….ஹாஹாஹா…..பைத்தியமென கூறு ...

நீயாக….

ஏதொன்றின் சாயலாகவும் வேண்டாம்.... - நீநிஜத்தில் நீயாகவே இரு போதும்....உன் அணுக்களில் நிறைந்திருக்கும்உன்னை.....வேறெவ்வித ஒப்பீடும் இல்லாது....உன்னை....உனக்காகவே காதல் செய்ய வேண்டும்.... உன்னில் இருக்கும் வெற்றிடத்தை....என் நிஜத்தை நிரப்பி வாழ்ந்து கொள்ளலாம்....வேறெந்த பொய்யும் வேண்டாம்....புனைவும் வேண்டாம்.... நீ.... நீயாகவே இரு....நீயாக மட்டுமே இரு.....- ஆலோன் மகரி

நாளைய தலைமுறை….

விடியல் வரும் காத்திரு.....இதே வார்த்தை தான் பல முறை பல செவிகளையடைகிறது....‌முதல்முறை.....யாரோ என் அருகிருந்தவருக்கு கூறினார்....அடுத்தமுறை ....எனக்கு பிடித்தவருக்கு கூறினார்.....பலமுறைகள் கடந்தும்....என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூறினார்....நேற்று....எனக்கும் கூறினார்.....அன்றெனது காதில் விழுந்த முதல்முறையை நினைக்கையில்....செயலன்றி ஏதும் மாறாது....ஏதுவான சிந்தனையன்றி நாமும் மாறுவதில்லை....நிச்சயமாக நாளை அடுத்த தலைமுறைக்கும் இதே வார்த்தைகள் சென்றடையத்தான் போகிறது....அதற்குமுன்.....இன்று நம் விடியலைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்போம்.....பிடித்தமோ பிடித்தமல்லதோ....நல்லதோ நன்றல்லதோ....ஒன்றுமோ ஒன்றாதோ.....நடக்குமோ நடக்காதோ.....யாவையும் மீண்டுமொருமறை சிந்தித்து செயல்படலாம்.....கடந்துவிடபோகும் வார்த்தையில் ...

ஒற்றையாய்….‌

சற்று நேரம் முன்பு தான்....உன் மார்சாயும் ஏக்கம் கொண்டு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்....கடந்து போன காலத்தை நினைத்து....அப்படி நடந்திருந்தால் ....இன்று நீயும் நானும்....ஒன்றாய் அமர்ந்து பேசியிருக்கலாம்.....ஓர் மழை மாலை வேளையில்....எனது தேநீரில் உன் இதழும் சுவைத்திருக்கலாம்.....எனக்கு பிடித்த புத்தகத்தின் வரிகளை....உன்னுடன் கலந்துரையாடி ஊடல் கொண்டிருக்கலாம்....நீயோ நானோ....கோபமாய் அருகில் அமர்ந்து முகம் திருப்பும் போதெல்லாம்.....'இச்'சென்ற சத்தமில்லா சமாதானங்களை செய்திருக்கலாம்.....இருக்கலாம்....இருக்கலாம்...இப்படி பலதை நினைத்து பொய்யாய் மனதை சமாதானம் செய்த வேளையில்.....நீயும் உன் துணையும் ...

ஏகாந்தமல்ல…

போதுமென்றளவு தனிமையில் கழித்துவிட்டேன்....இவ்வாழ்வில்....பெற்றவரும் சில காலம் தான்....உடன்பிறந்தவரும் சில காலம் தான்....ஒன்றாயிருக்கும் போதே தனிமை தேடுகிறது...தனித்திருத்தல் பல நேரங்களில் ஏகாந்தம் தான்‌......ஏகாந்தம்....இச்சொல்லின் மெய்ப்பொருள் விளங்கினேன்....பெற்றவரோ.... உற்றவரோ....உடன்பிறந்த இரத்தமோ....இதில் ஒன்றோ அல்லது அனைத்துமோ.....அனைத்து பாத்திரத்திலும் அன்பு பெற்று நிறைந்தால் அன்றி....ஏகாந்தமென்ன ‌.....வாழ்தலே சாபம் தான்....இவை ஏதுமின்றியோ....காலத்தின் தேவையானதின்றியோ வாழ்ந்தால்....அது வாழ்தலல்ல....அத்தனிமை ஏகாந்தமுமல்ல.... -ஆலோன் மகரி

மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

மகரியின் கிறுக்கல்கள் புத்தகம் – 1

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மகரியின் கிறுக்கல்கள் பாகம் -1" புத்தகம் வெளிவந்துள்ளது.  சில நேரங்களில் தோன்றிய சில கிறுக்கல்கள் எல்லாம் இப்போது புத்தக வடிவு பெற்று உங்கள் கைகளில் தவழ காத்திருக்கின்றன.  நோஷன் பிரஸ் தளத்தில் இப்புத்தகத்தை வாங்கி கொள்ளலாம். திரி கீழே :  https://notionpress.com/read/magariyin-kirukkalgal

உருமாறியதோ ???

மனதினில் ஏற்படும் வெறுமையை ஒழிக்க....புகை பிடிக்க இஷ்டமில்லை....புண்பட்ட மனதை புகை விட்டு உடலையும் வதைக்க விரும்பவில்லை...மது நாட நாட்டமில்லை...என் வலியை பல்மடங்காய் மாற்றி வலிக்க வைத்துவிடும்...மாதுவான நானே மாதுவை தேட முடியாது....ஹாஹாஹாஹா....மாதனை தேட இஷ்டமில்லை...மனிதனின் மேல் நம்பிக்கையில்லை....இவ்வாழ்வின் மீது பிடிப்பும்‌ இல்லை....ஆனாலும் ஏதோ ஒன்று....என்னை உயிர்வாழ வைக்கிறது....உயிர் மட்டுமே இயங்குகிறது...உணர்வில்லை....உணர்ச்சிகள் இல்லை....வெறுமை...சூன்யம் நிறைந்த வெறுமை.....வாழ்வை அரித்துக் கொண்டிருக்கிறது....வெள்ளமாய் ஊறும் ஊற்றானது கைகளை எட்டும் நேரம்...சட்டென நீரின் பாதை வழிமாறி ஓடியது ...

வீண் தான்…..

வீண் தான்....இதுநாள் வரையிலும்.....காட்டிய ஆசையும்....உணர்ந்த நேசமும்.....மூழ்கிப்போன இதயமும்....கொடுத்த அரவணைப்பும்....கிட்டாத காதலும்.....இடிந்த குடும்பமும்....உடைந்த புத்தியும்.....நொறுங்கிய அனைத்தும்.....வீண் தான்.....இவளின் இந்நாள் வரையிலான உயிர்த்திருத்தலில்.....உள்ளாவியின் குரல் கேட்டு...... அக்கண்ணில்படா விரல் பிடித்து.....நொறுங்கிய மொத்தத்தையும்....மீண்டும்....முதலில் இருந்து....அக்குரல் மொழியும் வழியே....இவளை இவளே தெளிவுப்படுத்தி....திடம் கொடுத்தபடி.....அஞ்சிய மனதை அதட்டி.....உடைந்த பாகங்கள் எல்லாம் சேர்த்து....இம்மனித கூட்டின் ஆவி பிரியும் வரையிலும்....இப்பிரபஞ்சம் சலித்துபோகும் வரையும்....எழுந்து நின்றுகொண்டே இல்லையென்றால்....மொத்தமும் வீண் தான்....அவளின்  இப்பிறவி..... - ஆலோன் மகரி

Page 1 of 9 1 2 9

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!