71 – ருத்ராதித்யன்
71 - ருத்ராதித்யன் அரண்மனையில் இருந்து கிளம்பிய நரசிம்மன் முதலில் வடக்கு பக்கமாக சென்றான். மிகவும் அடர்ந்த காடுகள் கொண்ட வடக்கு பக்கத்தில் பல அபாயகரமான விலங்குகள் வாழ்கின்றன. வடக்கில் இருக்கும் கூட்டப்பாறை என்ற இடத்தில் மகர வகை யாளிகள் வாழ்வதாக சிலர் கூறுகிறார்கள். நரசிம்மன் அந்த யாளியை காணும் ஆவலோடு மகதனை தனக்கு முன்னால் செல்லவிட்டு பின்னால் வந்தான். 21 நாட்களுக்குள் அவன் அனைத்து தேவிகளையும் தரிசித்து ஆசியோடு மலரும் பெற்று வரவேண்டும். 8 திசைகளில் வீற்றிருக்கும் இந்த தேவிகள் தான் அனைத்து நாட்டினருக்கும் காவல் தெய்வங்கள். அகண்ட தென்பாரத கண்டத்தில் இந்த தேவிகளை...




