கனவு

கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???ஆயிரம் கனவல்ல நான் காண்பது….கை எண்ணில் அடங்குபவை தான்…ஆனால்,காணும் கனவை கனவாக விடமாட்டேன்…திமில் கொண்ட காளையாக ….திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,மறுத்தாலும்…..கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா…. - ஆலோன் மகரி

யார் மனிதன்?

யார் மனிதன் ?ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் -  தன்னைகுடும்பத்தில்  புதைத்துக் கொண்டான்….இயற்கையுடன் சந்தோஷித்து….அழுக்கேறிய வேட்டியும்….தோளில் கிடந்த துண்டுமாக….வாழ்ந்திருந்தவரையும்….உழைத்து களைத்து களத்துமேட்டில் - தன்கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..அத்தைமகளின் வீம்பு… மாமன்மகளின் வக்கனைப்பு….சுற்றத்தாரின் எதிர் பார்ப்பில்லா அன்பு….அனைத்தும்…அனைத்தும்…..அவனருகில் இருந்தவரையில்….மனிதனாக வாழ்ந்தான்…ஊர் மறந்து….சுற்றம் துறந்து….தாய் தந்தையை கைவிட்டு….உடன்பிறந்தோரை விரோதமாக்கி…தான் என்ற சுயநலத்தில்…..தன்னலம் மட்டுமில்லாது...

பெண்ணின் புனிதம்

பெண்ணின் புனிதம் அவளின் மனதில்....உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை..... - அவளின்உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை.....ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாதுஉன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்...கற்பானது கறை படாது இருக்கும்....கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்.... - ஆலோன் மகரி

தர்மா

கண்களில் காந்தமா என யோசிக்கும்பொழுது..கருந்துளை வைத்து எனை மொத்தமாக இழுத்துவிட்டாய்….முறுக்கிய மீசையிலும் ….மடித்து கட்டிய வேஷ்டியிலும்….தர்மா… இது தர்மமா?பச்சை வயலில் உன் கரம் காண - நீஎன் மனதில் விதையாகி போனாய்….ஆழமரமாக வளர்ந்து விட்டாய் ….உன் நினைவின் பாரம் தாங்காது …..உன் மார் சாய வந்தேன்…..நெற்கட்டென உன் தோளில் தூக்கி செல்லடா…. - ஆலோன் மகரி

5 – வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

5 - வலுசாறு இடையினில் நங்கையிடம் சவால் விட்டுவிட்டு தோப்பிற்குச் சென்றவன், கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து வீசினான். வேக வேகமாக கோடாலி எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கினான் .‘பொட்ட கழுதை என்ன பேச்சு பேசிறா, ஏதோ பாக்க சுமாரா இருக்கா, கட்டினா நமக்கு தோதா இருக்கும்ன்னு நினைச்சி பேசினா என்னை ஆம்பள இல்லைன்னு சொல்றா .. அவள சும்மா விட கூடாது ..’ இப்படியாக தனக்கு தானே பேசிக்கொண்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்த பெரிய மரக்கட்டைகளைப் பொடிப்பொடியாக வெட்டி வீசி இருந்தான். அப்போது அங்கே வந்த வட்டி, “ அய்யோ...

சித்ரா பாலாஜி 

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -சித்ரா பாலாஜி 2. படிப்பு -M.com 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2016 ல் இருந்து தான் என் வாசிப்பு தொடங்கியது…… கல்யாணம் ஆன பிறகு தான் நான் படிக்க ஆரம்பித்தேன்…..  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?பொதுவாகவே என்னுடைய நேரம் படிக்கிறதுல தான் கழியும்….. ரொம்ப மனஅழுத்தம் இருக்கும் போது கண்டிப்பா படிப்பேன்…..  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?செல்பேசி வழியில் தான் .. 7. ஒரு வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ?  நான் இது...

22 – மீள்நுழை நெஞ்சே

22 - மீள்நுழை நெஞ்சே மாலை வரை நடந்தபடியே ஊர் சுற்றிய வில்சனும் துவாரகாவும், மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர்."என்ன சொல்லு வில்ஸ்… உங்க ஊரு கழுவி வச்ச மாதிரி நல்லா சுத்தமா தான் இருக்கு… இந்த மெட்ரோ ஸ்டேஷன் பாக்கவே சூப்பரா இருக்கு…", என ஸ்டேஷனை சுற்றிலும் கண்களை ஓட்டியபடிக் கூறினாள். வில்சன் இருவருக்கும் டிக்கெட் எடுப்பதை அவளும் அறிந்துக் கொள்ளக் கூறி அருகில் நிற்கவைத்து விவரம் கூறினான்‌. "உங்க ஊர்ல மெட்ரோ இல்லையா?", வில்சன் ப்ளாட்பார்ம் நோக்கி நடந்தபடிக் கேட்டான். "இருக்கு… இப்பதான் சிட்டீஸ்ல விட ஆரம்பிச்சி இருக்காங்க…. இங்க இருக்க அளவுக்கு வர இன்னும்...

வெற்றியின் அணைப்பு

கரைகளில் நின்று  இரசிக்க வரவில்லை உன்னை…..காணாத காட்சிகள் காண விழைகிறேன்கணை கொண்டு துளைத்தாலும்….அலைக்கொண்டு தடுத்தாலும்… - என்அடி வைக்கும் முத்திரைகளை மறைக்கமுடியாது…. மறுக்கவும் முடியாது…உன்னோடான என் போராட்டம் ….அஸ்தமனத்திலும் தொடரும்….எப்போராட்டமானாலும் தாக்கவும்வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!! - ஆலோன் மகரி

மௌனம்

மௌனம்.....இன்று அதிகம் ஆட்கொள்ள எண்ணுகிறேன்..மடைதிறந்த வெள்ளமாக இருந்த நான்...அணை கட்டிய நீராய் தேங்கி நிற்பதேனோ?பின் சென்று என்னை இழந்தேனா?முன்னே பாய பதுங்கி வாழ்கிறேனா?இந்நிலை புரிந்தும் புரியா சூழ்நிலையாக...வலையில் சிக்கி சிக்காமல் நான்.... - ஆலோன் மகரி

காதல்

காற்றினில் மிதந்து வரும் காதல் நீ !உன் காதலை ஏற்று வாழும் சுவாசம் நான்!சுவாசம் முழுதும் உன் காதலே !காதலின் வடிவில் இதயம் உருவானதே !உருவான இதயமதில் நீ இருந்தாய்!இருந்தபோது இல்லாத காதல் - நான்இறந்தபோது பிறந்தது ஏனடி ?????! - ஆலோன் மகரி

Page 32 of 58 1 31 32 33 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!