6 – அகரநதி
6 – அகரநதி அன்று காலையிலேயே அலுவலகத்தில் அனைவரும் பரப்பரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அங்கே ஒருவன் வாட்டசாட்டமாக அம்சமாக நடந்து வந்தான் கைகளில் பைலுடன். ஆறடிக்கு சற்று குறைந்த உயரம் மாநிறத்திற்கும் அதிகமான நிறம் அதற்கேற்ற உடல் எனக் கண்களைக் கவரும் அழகனாகவே இருந்தான்."மிஸ். ஸ்வப்னா…. சீக்கிரம் அந்த **** ஹோட்டல் பைலை ரெடி பண்ணுங்க. எம்.டி வந்தா உடனே கேப்பாரு"."இதோ மிஸ்டர்.சரண் நேத்து நைட்டே ரெடி பண்ணிட்டேன். அந்த டிசைன்ஸோட காப்பி இதுல இருக்கு. முக்கியமான யுனிக் டிசைன் நான் சாருக்கு மெயில் பண்ணிட்டேன்", ஸ்வப்னா."பைன். மீட்டிங் ரூம் ரெடியா...