16 – அகரநதி
16 – அகரநதி பூஜைகள் முடிந்து வந்த அனைவரும் அன்னதான கூடத்தில் நடந்துக் கொண்டிருந்தக் கலாட்டாவை சில நொடிகள் நின்றுப் பார்க்க, அங்கு வந்த நதியாள் அங்கிருந்தவர்களைத் தாண்டி முன்னே வந்து அங்கே கலாட்டா செய்துக் கொண்டிருந்த ஒருவனைப் பிடித்துக் கன்னத்தில் ஒரு அடியை விட்டாள்.அன்னதான கூடத்தில் ஏற்கனவே சாப்பாடு அனைத்தும் தயார் செய்து எடுத்து வைத்திருந்தனர்.சமையல் செய்தவரில் ஒருவன் தான் சாராயம் குடித்துவிட்டு வந்து அங்கே இருப்பவர்களிடம் தகராறுச் செய்துக் கொண்டு இருந்தான்.குடித்துவிட்டு தகராறு செய்பவனை வெளியேற்ற முயன்றபோது தான் ஆட்களுக்குள் கைகலப்பு ஏற்பட அந்த சமயம் நதியாள் உள்ளே...