27 – அர்ஜுன நந்தன்
27- அர்ஜுன நந்தன் ஆர்யன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் அர்ஜுன் மென்னகைப் புரிந்து விட்டு உடை மாற்றி வரச் சென்றான். பத்து நிமிடத்தில் வெளியே வந்த அர்ஜுன் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அவனை விட திமிராகப் பார்வைக் கொண்டு அமர்ந்தான். "என் கூட பிரேக் பாஸ்ட் சாப்பிடறியா ஆர்யன் ?", அர்ஜுன் போனை சுழற்றிக் கொண்டே கேட்டான். "நீ டின்னர் தான் என்கூட சாப்பிட ஆசைபடறன்னு நினைச்சேன்", ஆர்யன் குறையாத திமிருடன் பதில் கேள்விக் கேட்டான். "டின்னர் என்ன தினம் மூனு வேளையும் உன்கூட உக்காந்து சாப்பிடலாம் தான் . நீ...