நீ யார்?
கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி
கொடுப்பவன் கொடுக்கப் படவில்லை….நேசிப்பவன் நேசிக்கப் படவில்லை….உன்னை நீ யாரென நியமித்துக்கொள்…யாசிப்பவனாய் மட்டும் இறாதே….ஏமாற்றமே அணைக்கும் அடிக்கடி.... - ஆலோன் மகரி
கனவினை துறத்திட துணிந்தேன்…. - அதுஎனை விலகிட நினைத்தது…..காலங்கள் உருண்டோட … - நானும்அதனோடு நாட்களைக் கடந்தோட…..எண்ணிய காரியங்கள் ஈடேறவில்லை…. - நீநினைத்த யாவும் நடந்தேறியபின்….மீண்டும்……முதலில் இருந்து ஓடச் சொல்கிறாய்….ஈசா….உனை என்னுள் நிறைத்துள்ளேன்….உனையே திட்டித் தீர்க்கிறேன்….எனைத் தேடி வந்துவிடு…. - உன் உயிரைஉன்னோடு கொண்டு சென்றுவிடு…….இருவரும் தொடங்கலாம் மீண்டுமோர் அத்தியாத்தை….. - ஆலோன் மகரி
கடக்கின்ற நொடிகள்........நீளமாவதை உணர்கிறேன்.... - இன்னும்கடக்க வேண்டிய நீளம் எவ்வளவோ ?!இதுவரை காணா புது உணர்வு கொள்கிறேன்....கொள்ளும் உணர்வினை கொல்லவா?காரணமில்லா கோபங்கள்.....அன்புகாட்டும் இதயத்தை எனையறியாமல் தாக்குகிறேன்......விடை தெரியாது குழம்பி நிற்கிறேன்....வேண்டும் என யாசிக்கவில்லை....வேண்டாமென தூற்றவும் இல்லை....ஏனோ என் மனநிலையில் மாற்றம்...மாற்றத்தின் காரணமாய் குழப்பமா?மாற்றமே குழப்பமா ???!!! - ஆலோன் மகரி
கருவிழியில் தோன்றியது காதல்.....!இன்னதென்று அறியாமலே வளர்கிறது.....!நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்.....இரண்டும் வேறல்ல – ஆனால்இரண்டும் ஒன்றல்ல......இதன் பிரிவினை தெரியாமல்...திண்டாடுகிறது மனம்.....மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்........... - ஆலோன் மகரி
22 - மீள்நுழை நெஞ்சே மாலை வரை நடந்தபடியே ஊர் சுற்றிய வில்சனும் துவாரகாவும், மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர்."என்ன சொல்லு வில்ஸ்… உங்க ஊரு கழுவி வச்ச மாதிரி நல்லா சுத்தமா தான் இருக்கு… இந்த மெட்ரோ ஸ்டேஷன் பாக்கவே சூப்பரா இருக்கு…", என ஸ்டேஷனை சுற்றிலும் கண்களை ஓட்டியபடிக் கூறினாள். வில்சன் இருவருக்கும் டிக்கெட் எடுப்பதை அவளும் அறிந்துக் கொள்ளக் கூறி அருகில் நிற்கவைத்து விவரம் கூறினான். "உங்க ஊர்ல மெட்ரோ இல்லையா?", வில்சன் ...
21 - மீள்நுழை நெஞ்சே "வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?", எனத் துவாரகா வியந்தபடிக் கேட்டாள். "அவனுக்கு சுத்தமா இல்லைன்னா அவ்வளவு தான். ஓசிடி இருக்கு…. சோ ரொம்பவே சுத்தம் பாப்பான்…", இனியா சிரிப்புடன் கூறினாள். "அப்ப என் வீட்ட நீ தான் க்ளீன் பண்ணுவ வில்ஸ்", எனத் துவாரகா சிரிப்புடன் கூறினாள். "நீ இப்படி கனவு காணு அவன் ...
20 - மீள்நுழை நெஞ்சே அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத் திறந்தாள் துவாரகா. "என்ன காய்ஸ்… இவ்வளோ சீக்கிரம் வந்து இருக்கீங்க?", எனத் தூக்கத்திலேயே உளறினாள். "ஓஹ் ...
1 - வலுசாறு இடையினில் ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது."எருமை ...
19 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் விட்டு இறங்கினாள். அங்கே அவளுக்காக ஒரு இந்திய பெண்ணும், அந்நாட்டு ஆணும் காத்திருந்தனர். தனது பைகளை எடுத்துக்கொண்டு இம்மிகிரேஷன் முடிந்து வெளியே வந்தாள். "துவாரகா", என்று எழுதப்பட்ட போர்ட் கண்டு அவர்கள் அருகில் சென்றுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். "ஹாய் காய்ஸ்… ஐ ம் துவாரகா", என இருவரிடமும் கைக்குலுக்கினாள். "ஹாய்.. நான் இனியா… இவன் ரிச்சர்ட் … ...
18 - மீள்நுழை நெஞ்சே வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் படி, ஆனால் வயது கோளாறு அது இது என்று சாக்குக் கூறி, அவனை அப்போதிருந்து அக்காவும், தன் தாயும் தாங்கியதால் வந்த வினை என்று உணர்ந்தார்.அதற்கு பின் அவன் சென்ற இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு தவறைச் செய்து இன்றுவரை மாமன்களின் ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….