14 – மீள்நுழை நெஞ்சே
14 - மீள்நுழை நெஞ்சே “கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் கனி.. இன்னிக்கு ரவைக்குள்ள கட்டலன்னா அப்டியே ரெண்டு மடங்கு வட்டி கட்டணும். அதான் ..”, எனக் கனிமொழியிடம் காரணத்தை விளக்கினான். “எல்லா திருட்டு பயலுகளும் நல்லா தான் சொல்றாங்க காரணம்.. ஏன் கனி இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?”, என துவா அவன் சட்டையை ஆராய்ந்தபடிக் கேட்டாள். “இரு துவா .. யார்கிட்ட கடன் வாங்கின ? எதுக்கு வாங்கின ?”, எனக் கனி தனது விசாரணையை ஆரம்பித்தாள். “வேற யாரு .. எல்லாம் எங்கத்தகிட்ட தான்.. அது தான் ஊருக்குள்ள இவ்ளோ வட்டி...








