37 – அர்ஜுன நந்தன்
37 - அர்ஜுன நந்தன் அங்கிருந்த கிளம்பிய அர்ஜூனும் யாத்ராவும் நம்ம பழைய வீட்டுக்கு வந்தாங்க. வாசல்லயே நந்துவும் செந்திலும் நின்னுட்டு இருந்தாங்க."ஹாய் சீனியர் என்ன வாசல்ல நிக்கறீங்க?", யாத்ரா. "உன்கூடலாம் இருந்தா நடுரோட்ல தான் நிக்கணும். இங்கயாவது நிக்கறனேன்னு சந்தோஷப்படு. என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க ரெண்டு பேரும்?", செந்தில். "காரியமும் பண்ணல கருமாதியும் பண்ணல", யாத்ரா. "அந்த ஜாக்சன எதுக்கு இப்ப இங்க தூக்கிட்டு வந்து இருக்கீங்க?", செந்தில். "உள்ள போய் பேசிக்கலாம் வாங்க செந்தில்", என யாத்ராவின் தோளணைத்து உள்ளே நடந்தான் அர்ஜுன். "அவள இவன் அடக்குவான்னு பாத்தா இவனும் கூட சேந்து எல்லாத்தையும்...