42 – அகரநதி
42 - அகரநதி வீட்டிற்கு வந்த அகரனும் நதியாளும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்தபடி ஒருவர் அறியாமல் மற்றவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் ஊடல் அறிந்த பெரியவர்கள் அவர்களைக் கண்டும் காணாமல் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர். துவாரகன் இருவரின் முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பொறுத்து பார்த்தவன் முடியாமல் நதியாள் அருகில் சென்று அமர்ந்தான். "ஹாய் சிஸ்டர்…. நான் துவாரகன். அகரோட பிரண்ட்", எனத் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான். "ஹலோ ப்ரோ… நான் நதியாள் அகரனோட மனைவி", என வணக்கம் ...