Tag: மகரியின் கிறுக்கல்கள்

மௌன மொழி

அவளின் குரல் ஓசை எழுப்பவில்லை…அவளின் மனம் பெரும் ஓசையுடன் ஒலிக்கிறது…..யாரும் இல்லா தனிமையில்….நிச்சயம் வெறுமை இல்லை…மனதில் பல நூறு அல்ல.. ஒரே எண்ணம் தான்…வாழ்வின் பாதை எதை நோக்கி?கூறும் அளவு சந்தோஷம் இல்லை…சொல்ல முடியா அளவு வேதனை உள்ளது….பேசும் அளவு வரிகள் இல்லை…பேசாத பல கனவுகள் உண்டு…மாறாத ஆசைகள் உண்டு….மாறிய தடங்களும் உண்டு…இயலாத செய்கைகள் இல்லை….முயற்சியை தடுக்கும் பெருஞ்சுவர் உண்டு….காணுதற்கரிய காட்சிகள் பல கண்டும்….சராசரி நிகழ்வுகள் இயற்றப்படவில்லை….வாய் மூடாமல் வாயடித்தவள்…இன்று மௌனியாகிட ...

என் கைப்பேசி

தினம் தினம் பயந்தது.....உயிர் வர போகவென இருந்தது.....எனை விட்டு போனாயே....சென்ற உயிர் திரும்பவில்லை...நிரந்தர உறக்கத்தில்.....என் கைபேசி.... - ஆலோன் மகரி

நினைவுகள்

மலரும் நினைவுகளால் மகிழ்ச்சி !மகிழ்ச்சி அது உன் நினைவு மலர்ந்ததால் ...!மலர்ந்த நினைவில் என்னை மறந்தேன் !மறந்த என்னை தட்டினால்(ள்)  மனைவிமனைவியைப் பார்த்ததும் விழித்தேன் !விழித்ததும் தெளிந்தேன் நினைவை !நினைவில் இருந்தால் காதலி !காதலில் இருக்கிறாள் மனைவி என்மேல் ..... !!!!! - ஆலோன் மகரி

மனம்

கருவிழியில் தோன்றியது காதல்.....!இன்னதென்று அறியாமலே வளர்கிறது.....!நட்பும் காதலும் ஓர் வழியில் செல்லும் இருதுருவங்கள்.....இரண்டும் வேறல்ல – ஆனால்இரண்டும் ஒன்றல்ல......இதன் பிரிவினை தெரியாமல்...திண்டாடுகிறது மனம்.....மனம் கொடுத்தது மணம் செய்யத்தானா ?நட்பை பெற்றது காதலில் ஜெயிக்கத்தானா ?குழம்பி நிற்கிறது எண்ணற்ற மன(ண)ங்கள்........... - ஆலோன் மகரி

கனவு

கண்ட கனவெல்லாம் கனவாகவே வளர்கிறது…எந்நொடி அதை நிஜமாகச் செய்வாய்???ஆயிரம் கனவல்ல நான் காண்பது….கை எண்ணில் அடங்குபவை தான்…ஆனால்,காணும் கனவை கனவாக விடமாட்டேன்…திமில் கொண்ட காளையாக ….திமிரோடும், திறமையோடும் போராடுவேன்…காணும் கனவில் சுயநலம் அதிகம் தான்….என் சுயநலத்தால் பொதுநலம் பெருகுமென்றால்இன்னும் அதிகம் சுயநலம் கொள்வேன்….தோழனோ, தோழியோ யார் துணை கொடுத்தாலும்,மறுத்தாலும்…..கண்ட கனவை நிஜமாக்காது பிரியாது என் ஆத்மா…. - ஆலோன் மகரி

யார் மனிதன்?

யார் மனிதன் ?ஊர் காப்பாற்றி வளர்ந்தவன் -  தன்னைகுடும்பத்தில்  புதைத்துக் கொண்டான்….இயற்கையுடன் சந்தோஷித்து….அழுக்கேறிய வேட்டியும்….தோளில் கிடந்த துண்டுமாக….வாழ்ந்திருந்தவரையும்….உழைத்து களைத்து களத்துமேட்டில் - தன்கட்டையை சாய்த்தாலும் சொர்க்கமென துயில் கொண்டான்….பகிர்ந்துண்ட எச்சல் பண்டத்தில் பெற்ற ஆரோக்கியம்.…நண்பனின் இடைப்பிடித்துக் கற்ற நீச்சல்…..தந்தையின் அதட்டலில் கொண்ட கோபம்….தாயின் அணைப்பில் கண்ட தவிப்பு…அக்காவின் மேல் அக்கறையில் எடுத்த குடும்ப பாரம்….தங்கையின் கண்ணீரில் எழுந்த ரௌத்திரம்….அண்ணனின் அரவணைப்பில் அணை கொண்ட நெஞ்சம்….தம்பியின் தோள்களில் திணவெடுத்த வீரம்…..அத்தைமகளின் வீம்பு… மாமன்மகளின் ...

பெண்ணின் புனிதம்

பெண்ணின் புனிதம் அவளின் மனதில்....உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை..... - அவளின்உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை.....ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாதுஉன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்...கற்பானது கறை படாது இருக்கும்....கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்.... - ஆலோன் மகரி

வெற்றியின் அணைப்பு

கரைகளில் நின்று  இரசிக்க வரவில்லை உன்னை…..காணாத காட்சிகள் காண விழைகிறேன்கணை கொண்டு துளைத்தாலும்….அலைக்கொண்டு தடுத்தாலும்… - என்அடி வைக்கும் முத்திரைகளை மறைக்கமுடியாது…. மறுக்கவும் முடியாது…உன்னோடான என் போராட்டம் ….அஸ்தமனத்திலும் தொடரும்….எப்போராட்டமானாலும் தாக்கவும்வெற்றியோடு உன்னை அணைக்கவும்…… !!! - ஆலோன் மகரி

மௌனம்

மௌனம்.....இன்று அதிகம் ஆட்கொள்ள எண்ணுகிறேன்..மடைதிறந்த வெள்ளமாக இருந்த நான்...அணை கட்டிய நீராய் தேங்கி நிற்பதேனோ?பின் சென்று என்னை இழந்தேனா?முன்னே பாய பதுங்கி வாழ்கிறேனா?இந்நிலை புரிந்தும் புரியா சூழ்நிலையாக...வலையில் சிக்கி சிக்காமல் நான்.... - ஆலோன் மகரி

காதல்

காற்றினில் மிதந்து வரும் காதல் நீ !உன் காதலை ஏற்று வாழும் சுவாசம் நான்!சுவாசம் முழுதும் உன் காதலே !காதலின் வடிவில் இதயம் உருவானதே !உருவான இதயமதில் நீ இருந்தாய்!இருந்தபோது இல்லாத காதல் - நான்இறந்தபோது பிறந்தது ஏனடி ?????! - ஆலோன் மகரி

Page 8 of 11 1 7 8 9 11

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!