93 – ருத்ராதித்யன்
93 - ருத்ராதித்யன் “என்ன கூறுகிறாய் அமரா? பைரவக்காட்டின் தடமா?” என நரசிம்மன் அதிர்ந்து கேட்டான். “ஆம்.. ஆருத்ரா அதை கண்டுவிட்டாள்.. இன்னும் சிறிது நாட்களில் முழுதாக அதற்கான பாதையை அவள் கண்டுபிடித்துவிடுவாள். அதற்குள் நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.தவிர..” என அவன் கிளம்பியத்தில் இருந்து நடந்த அனைத்தையும் அவனிடம் கூற ஆரம்பித்தான். வாருங்கள் நாமும் அவர்கள் ருத்ரக்கோட்டையில் இருந்து கிளம்பியதில் இருந்து பார்ப்போம். மஹாராஜா ருத்ரக் கோட்டை வரும் முன்னரே அமரபுசங்கன், யாத்திரை, சிங்கத்துரியன் மூவரும் அமரக்கோட்டை புறப்பட்டனர். அடர்வனங்களில் புகுந்து மூன்று நாட்களில் அமரக்கோட்டை எல்லையில் வந்து நின்றனர். இடையில் தேவைக்கு...



