Tag: சுயம்

என் வழி..

என் மனதோடு சில வரிகள் .. மனதின் பல மொழிகளோடு .. பல மௌனங்களின் பதில்கள் .. மௌனமான கேள்விகள் .. ஏதும் அறியா கன்னியாக நான் ! பலதும் கற்ற பேதையாக வாழ்கிறேன் .. முகமறியா நட்பும் .. முகமறிந்த மோதலும் .. காதலில் தோல்வியும் .. மர்மத்தின் மையத்தில் குடி கொண்டு விட்டேன் .. விடையறியா கேள்விகள் .. கேள்விகள் இல்லா விடைகள் .. எனக்கும் உனக்கும் இடையே .. தடுமாறும் மனிதர்கள் !! சொல்வது தத்துவமல்ல .. சொல்லாதிருந்தால் தவறும் அல்ல .. ஆயினும், சிறு சிறு மௌனங்கள் .. சில ...

இருதலைக்கொள்ளி

சொல்ல ஏதும் இல்லை .. ஏதோ மனதை கவர்கிறது .. விரக்தியும், ஆர்வமும் .. மாறி மாறி ஆள்கிறது என்னை ..!! புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது .. மறந்து விட ஆர்வம் மறுக்கிறது .. இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் .. எதை நாடி போவேனோ இறுதியில் ..??? - ஆலோன் மகரி 

அழை

கனவில் வாழ்கிறேன் .. நித்தம் உன்னை காண்கிறேன் .. பதில் கூறா கேள்விகள் .. ஓடும் யுகங்கள் .. காண்பவை யாவிலும் விரக்தி .. விரயமாகும் காலங்கள் .. ஒளிக்காட்டி ஓடி மறையாது .. வழிக்காட்டி அழைத்து செல் .. !!!  - ஆலோன் மகரி 

நான் வாழ….

ஆழிலையின் ஆழம் தொட்டு வரும் அமைதி வேண்டும் ... ஆனால் அதில் அடங்கும் அழுத்தம் தாளமுடிகையில் ...சட்டென்று மேலெழுந்து பறக்கும் சிறகுடன் ஏறி ....கழுகுக்கும் மேலே பறந்து காற்றின் அழுத்தம் தாங்கி பறக்க நினைக்கிறேன் .....ஹாஹா ....சொற்களும் கோர்வையில்லை ...‌மனமும் நிலையில் இல்லை ....காலம் கடந்து சீக்கிரம் செல்ல வேண்டும் ....எனக்கான நாட்களை நான் வாழ .... - ஆலோன் மகரி

திருப்தி

கனவிலும் கற்பனையிலும் ...வாழும் வாழ்வை ...நிஜத்தில் சுவாசிக்கவே விழைகிறேன் ...ஆனதொரு வாழ்வமைந்தால் ... ஆத்ம திருப்தியடைவேனோ..... ???!!! - ஆலோன் மகரி 

இறுதியில் உறுதியாக

காதல் பொய்த்து போனது …..வாழ்க்கை பொய்த்து போனது ….நம்பிக்கை பொய்த்து போனது …உறவுகள் பொய்த்து போனது ….உறுதியாக நினைத்த சில நட்பும் …இறுதியாக பொய்த்து போனது …உள்ளிருந்து வெளிப்பட்ட சிரிப்பு …அதன் காரணம் அறியேன் …நிற்காமல் வரும் சிரிப்பை நிறுத்தவும் விழையேன் ….மூடனாக இருந்திருந்தால் சிறுஅமைதி கிட்டியிருக்கும் …கண்மூடித்தனமான மூடனாய் கடந்துவிட்டேன் இத்தனை காலமும் … - நான்தனித்திருப்பது புதிதல்ல ….குழுவாய் இருந்தபோதும் தனித்தே இருந்திருக்கிறேன் ….மகாதேவா …..நீயின்றி எவரும் ...

வலி

தடம் மாறிப் போக நினைத்தது இல்லை ......வாழ்வின் அரவனைப்பில் .... - திடம்குறையாது ஓடுகிறேன் ....வலியனைத்தும் வலிமையாக ......எதிர்கொள்ள காத்திருக்கிறேன் .....எதிர்வரும் வலிகளுக்காக ..... - ஆலோன் மகரி 

காணவில்லை…

தொலைந்து கொண்டிருக்கின்றன நொடிகள் ...தொலைகிறதென எப்படி உணர்ந்தாய் ?எனக்காய் கழியவில்லை ....அது தான் காரணமா ?என் பிடித்தங்களிலும் கழியவில்லை ...அவ்வளவு தானா ?கழியும் நொடிகளில் என்னை காணவில்லை ...உன்னையா ?ஆம் ....தொலையும் நொடிகளில் எள்ளளவும் என் மனம் லயிக்கவில்லை ....பிறகு..... ? !என்னையும் காணவில்லை ...எனக்கான க(ன)ணங்களும் காணவில்லை .... - ஆலோன் மகரி

எதுவோ… நானோ….

வெட்டவெளியில் தான் திசை தெரியாது நிற்கிறேன் ....இருட்டென்பது தனியே பிரித்து காண அவசியமில்லாத நாட்கள் ...வடகயிறு கொண்டு மனதை எதுவோ இறுக்குகிறது ...மூச்சு நிற்கும் நொடியில் சற்று ஆசுவாசமெடுக்க வைக்கிறது ...அனுமதி கேளாமல் மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்வுகளாக தொடர்கிறது ....பெருங்குரலெடுத்து கத்த நினைக்கிறேன் ...அடிகுரல் கூட வெளி வர மறுக்கிறது ...இந்நிலை தொடர்வதன் காரணம் அறியேன் ....எதுவோ ...எதுவாகவோ ....மனமோ ... நானோ ....பரிணாமம் கொள்ள போகிறது .... - ஆலோன் ...

நிலை கொள்ளா ஆன்மா

மனதில் ஆடும் சொற்கள்..... ஊசலாடும் உணர்வுகள்..... வருணனின் வருடல்கள்.... காலதேவனின் ஒளடதங்கள்.... இவற்றுக்கிடையில்....... நிலைகொள்ளா ஆன்மாவாக நான்.... - ஆலோன் மகரி

Page 5 of 8 1 4 5 6 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!